தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் - Closing the nose and fighting in a new way

சென்னை: ஆவடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூக்கை மூடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழிவுநீரை அகற்ற கோரி  100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூக்கை மூடி நூதன முறையில் போராட்டம்
கழிவுநீரை அகற்ற கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூக்கை மூடி நூதன முறையில் போராட்டம்

By

Published : Nov 29, 2019, 11:35 PM IST

சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 35ஆவது வார்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு முறையாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆவடி மாநகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மூக்கை மூடிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டகாரர்கள் கூறுகையில், 'பெரியார் நகர் மற்றும் காமராஜர் நகரில் பல மாதங்களாக கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்வநாற்றம் வீசுவதோடு கொசு புழுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

கழிவுநீரை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி போராட்டம்..
!

ABOUT THE AUTHOR

...view details