வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதையொட்டி மக்களும் அதிகளவில் காய்கறிகளை வாங்க குவியத் தொடங்கியுள்ளனர்.
விளைச்சல் இல்லாத சமயத்தில் தேவை அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.