mall roof collapse: சென்னை அண்ணா நகரில் 6 அடுக்குகள் கொண்ட பிரபல மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுண்டு. குறிப்பாக மாலின் மேற்கூரை இரும்பு பைப்புகள் தாங்கி இருக்கக்கூடிய கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 30) மாலை முதல் பெய்து வரும் கனமழையினால் மாலின் ஃபால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.