சென்னை: அடையாறு சாஸ்திரி நகர் முதல் மெயின் ரோடு 6ஆவது குறுக்கு தெரு உள்ளது. இங்கு உள்ள குப்பைத்தொட்டியை சுத்தம் செய்ய வழக்கம்போல் துப்புரவு பணியாளர்கள் இன்று (ஆக.23) விடியற்காலை 6.30 மணியளவில் வந்துள்ளனர்.
அப்போது குப்பை தொட்டி அருகே ஒரு பையில் மனித மண்டை ஓடு, கால், கை எழும்புகள் உள்ளிட்டவை தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவு மேற்பார்வையாளர் தங்கம் பழனி, சாஸ்திரி நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
பைகளில் கைப்பற்றப்பட்ட மண்டை ஓடு உள்ளிட்ட எழும்புக்கூண்டு ஆய்வகக்கூடங்களுக்கு அனுப்பப்பட்ட எலும்புக்கூண்டு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பையில் வைக்கப்ப்ட்டிருந்த எலும்புக் கூட்டை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எழும்புக்கூடானது 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபரின் எலும்புக் கூடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த எலும்புக் கூட்டின் ஒரு பகுதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆய்வக கூடத்திற்கும், மற்றொரு பகுதி தடயவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாஸ்திரி நகர் காவல்துறையினர், சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடானது ஆணா? பெண்ணா? என்பது ஆய்வக அறிக்கை முடிவுக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை
கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடானது மருத்துவ ஆய்வுக் கூடத்திற்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க:ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழிலதிபரின் மகன் - அதிர்ச்சி தகவல்