சென்னை:தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தை பூசம், விநாயகர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகை நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. விடுமுறை தினங்களுடன் அரசு விடுமுறை வருவது பள்ளி மாணவர்கள் இடையே ஏமாற்றத்தை தருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் அரசு விடுமுறைகள்... 2023ஆம் ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை தினங்கள் தெரியுமா..? - ரம்ஜான்
தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 பண்டிகை தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.
ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு விடுமுறைகள்
ரம்ஜான், மொஹரம் ஆகிய பண்டிகை விடுமுறைகள் சனிக்கிழமைகளில் வருகின்றன. திருவள்ளுவர் தினம், மே தினம், காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் ஆகியவைகளுக்கான விடுமுறைகள் திங்கள் கிழமை வருவது மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்க கூடிய வகையில் உள்ளது.