சென்னை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் இடங்களில் பரப்புரை அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தலுக்குத் தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.