சென்னை:தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரி சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இருந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனையானது தொடர்ந்து களைகட்டி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கடந்த வாரம் போரூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வனிக வளாகத்தில் அலுவலகம் அமைத்து, கூகுள் பே (Google Pay), போன் பே (Phone pay) போன்ற சகல வசதிகளோடு, பிரிண்டிங் மிசின் வசதியோடு இங்கு லாட்டரி விற்பனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக லக்கி டிரா என்ற லாட்டரி விற்பனை இங்கு களைக்கட்டுவதாகவும், காலை 11.30 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி, மற்றும் 6 மணி இரவு 7:30 மணி என 5 குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் அதனால் எப்பொழுதுமே கூட்டம் முண்டியடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:Part time job Cheating: பார்ட் டைம் வேலை என டெலிகிராமில் மோசடி.. ரூ.45 லட்சம் பறிகொடுத்த அவலம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?