தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வும் தமிழ்நாடு நடைமுறைகளும்! - பொதுத்தேர்வு கால அட்டவணை 2022

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடக்கும் பொதுத்தேர்வில் உள்ள நடைமுறைகளை என்னென்னெ என்பது குறித்து விளக்குகிறது, இந்தத் தொகுப்பு...

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022
தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022

By

Published : May 11, 2022, 7:32 PM IST

சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் எங்கும் வெளியாகாமல், தேர்வு நடத்தப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையால் இதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் ரகசியமாகவும், பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.

கேள்வித்தாள் அச்சிடுதல், அனுப்புதல் உள்ளிட்ட ரகசியத் தன்மை வாய்ந்த பணிகள் அனைத்தும் தேர்வுத்துறை இயக்குநர் மூலமாகவே நடைபெறும். மேலும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கூட்டுப் பொறுப்பு வழங்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளும் தீவிரமாக இருக்கும். இதனால் தேர்விற்குரிய கேள்வித்தாள் எங்கும் வெளியாகாமல் பாதுகாப்பாக நடைபெறுகிறது.

10, 11, 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து அரசுத் தேர்வுத்துறையால் பெறப்படுகின்றன. மாணவர்களின் விபரங்கள் பலமுறை தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரால் சரிபார்க்கப்படுகிறது. மாணவரின் விபரங்கள் தவறாக இருக்க கூடாது என்பதற்காக பெற்றோரின் கையொப்பமும் படிவத்தில் பெற்று வைத்துக் கொள்ளப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை அறிவிக்கும். பின்னர் ஏற்கனவே தேர்வு மையமாக உள்ள பள்ளிக்கும், புதியாக தேர்வு மையங்கள் வேண்டும் என விண்ணப்பிக்கும் பள்ளியையும் ஆய்வு செய்து தேர்வு மையத்திற்கு அனுமதியை அரசுத் தேர்வுத்துறை அளிக்கும்.

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022

பொதுத் தேர்விற்கான கேள்வித்தாள் ஆசிரியர்களை கொண்டு தேர்வுத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் தயாரிக்கப்படும். ஒவ்வொருப் பாடத்திற்கும் 10 கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு, அதில் தேர்வுத்துறை இயக்குனர் ஒரு கேள்வித்தாளை எடுத்து அச்சிடுவதற்கு அனுப்புவார்.

கேள்வித்தாள் அச்சிடும் பணிகள் அனைத்தும், முழுவதும் ரகசியமாகவே நடைபெறும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்ற விபரத்தின் அடிப்படையில் ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் என்ற விகித்தில் அச்சிட்டப்பட்ட கேள்வித்தாள் கட்டப்பட்டு, தேர்வு மையத்தில் உள்ள மாெத்த மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட அளவில் அமைக்கப்படும் வினாத்தாள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

கேள்வித்தாள் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் போது காவல்துறையின் பாதுகாப்பும் அளிக்கப்படும். மேலும் தேர்வுத்துறையின் அலுவலர் ஒருவரும் உடனே செல்வார்கள். தேர்விற்கான விடைத்தாள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்படும்.அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியில் இருப்பார்கள். இந்த மையத்தில் 2 பூட்டுகள் போடப்பட்டு, இருவரிடம் சாவிகள் பராமரிக்கப்படும். தேர்வினை நடத்தும் பொறுப்பு முழுவதும் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு உரியது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலும் தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022

முக்கியப் பாடங்கள் உள்பட அனைத்துப் பாடங்களுக்கான வினாத்தாள் கட்டுக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வினாத்தாள் கட்டுக்கள் வைக்கப்படும் அறையானது முழுவதும் மூடப்பட்ட நிலையிலும், ஜன்னல்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஜன்னல்கள் இருப்பின் அவை உடனடியாக அகற்றப்பட்டு செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரட்டை பூட்டு அமைப்பு கொண்ட இரும்பு அலமாரிகளில் வைக்கப்படும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். பள்ளி, தேர்வு மையமாகவும் இருப்பின் தேர்வு மையத்திற்குத் தனிகாவலர் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒரே ஊரில் ஒரே பள்ளியில் இரண்டிற்கும் மேற்பட்ட வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை அமைக்கக் கூடாது. அதாவது அதிக தூரம் பயணம் செய்து வழித்தட அலுவலர்கள் வினாத்தாள் கட்டுக்களை தேர்வு மையங்களில் ஒப்படைக்கும் சூழலில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை அமைத்தல் கூடாது.

வினாத்தாள் கட்டுக்கள் அனைத்தும் இரட்டை பூட்டு அமைப்பு கொண்ட இரும்பு அலமாரிகளில் மட்டுமே வைத்துப் பூட்டப்படுதல் வேண்டும். அறையில் தரைமீதோ, மேஜை மீதோ கட்டுக்கள் வைக்கப்பட்டிருத்தல் கூடாது. வினாத்தாள் கட்டுக்கள் பிரிக்கப்படாமல் தேதி, பாடம் மற்றும் மையம் வாரியாக ரகசிய (மந்தண) அறையில் அலமாரிகளில் அடுக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் எந்தவொரு தேர்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் எழுத்துப் பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்கக் கூடாது.

மேலும், மாற்று ஆணை வழங்கும்போது சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துத் தேர்வு மையங்களையும் பார்வையிட்டு, அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதனை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022
11, 12ஆம் வகுப்பு வினாத்தாள் பாதுகாப்பு மையத்தின் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக ஒரு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரையும், மேல்நிலை பாடத்தொகுப்புகள் மற்றும் பாடங்கள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்த ஒரு முதுகலை ஆசிரியரையும் ஆசிரியரையும் நியமிக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக ஒரு உயர் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரையும், ஒரு மூத்த பட்டதாரி ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களையே துறை அலுவலராக நியமிக்க வேண்டும்.

தேர்விற்கான கேள்வித்தாள்களை வழித்தட அலுவலர்கள் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து பெற்றச் சென்று தேர்வு மையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள துறை அலுவலர் (ஆசிரியர்) ஒப்படைக்க வேண்டும். அதனை அவரும், பள்ளியில் தேர்வினை நடத்துவதற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளர் (ஆசிரியர்) பெற்று கட்டுப்பாட்டு அறையில் உள்ள பீரோவில் வைத்துப் பூட்டி சீல் வைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்கக பிரதிநிதியாக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துறை அலுவலர் நியமிக்கப்படுவார்.

தேர்வுகள் நேர்மையாகவும், செம்மையாகவும், திறமையாகவும் நடைபெற முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து செயல்படுவது இவரது தலையாய பணியாகும். முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முகப்புச்சீட்டு தைக்கப்பட்டுள்ள விடைத்தாட்கள் சரியாக (தேதி / பாடம்) தைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தேர்வு நாளன்று வழித்தட அலுவலர் வினாத்தாள் கட்டுக்களை (கேள்வித்தாள்) எடுத்துக்கொண்டு மையத்திற்கு வருவதற்கு முன்பாக, தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும். வினாத்தாள் கட்டுக்களை வழித்தட அலுவலரிடமிருந்து பெறும்பொழுது தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து, தேர்வு மையம், தேர்வு நாள், பாடம் ஆகிய
விவரங்களைச் சரிபார்த்து பாதுகாப்பாக இரும்பு அலமாரியில் வைத்துப் பூட்டி அரக்கு முத்திரையிட வேண்டும்.

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022

வினாத்தாள் கட்டுக்களை வழித்தட அலுவலரிடமிருந்து பெற்று சரிபார்த்து பின் பாதுகாப்பாக இரும்பு அலமாரியில் வைத்து பூட்டியவுடன் துறை அலுவலர்கள் தங்களது செல்போன்களை அணைத்து வைத்து தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு நேரம் முடியும் வரை துறை அலுவலர்கள்
அலைபேசிகளை தம்முடன் வைத்திருத்தலோ, பயன்படுத்துதலோ கூடாது. அலைபேசியை தம்முடன் வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ கண்டறியப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து உரிய விடைத்தாள் பாக்கெட்டுகளை அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்க உதவி புரிந்திட வேண்டும். 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9.25 மணிக்கு இரும்பு அலமாரியிலிருந்து வினாத்தாள் சிப்பங்களை (கட்டுகளை) வெளியே எடுத்தல் வேண்டும். 9.30 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளருடன் வினாத்தாள் சிப்பத்தினை பிரித்து ஒவ்வொரு அறைக்கண்காணிப்பாளருக்கும் அவருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்கு ஏற்ப, வினாத்தாள் உறைகளை வழங்க வேண்டும். வழங்கியவுடன் மீதமுள்ள வினாத்தாள் உறைகளை கண்டிப்பாக இரும்பு அலமாரியில் பூட்டி அரக்கு முத்திரையிட வேண்டும்.

ஆய்வின்போது மீதமுள்ள வினாத்தாள்கள் இரும்பு அலமாரியில் வைத்து பூட்டி முத்திரை இடப்படாமல் இருப்பது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 9.45 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளருடன் பள்ளி வளாக நுழைவு வாயிலுக்குச் சென்று தேர்வர்கள் தவிர பிறர் வராமல் கண்காணிக்க வேண்டும். 10.15 க்கு தேர்வு மையத்தின் மொத்த அறைகளைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளருடன் பகிர்ந்து கொண்டு தமக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று வினாத்தாள் உறை, தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் மொழிப் பாட விலக்கு அளிக்கப்பட்டோரின் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றைப் பெற்று தேர்வுக் கட்டுபாட்டு அறைக்கு எடுத்து வர வேண்டும்.

மீதமுள்ள வினாத்தாட்களுடன் சேர்த்து பிரவுன் தாளில் கட்டி 10.30-க்குள் அரக்கு முத்திரையிட்டு பாதுகாப்பாக அலமாரியில் வைத்து பூட்டி முத்திரையிடப்பட வேண்டும்.10.30-க்கு மேல் க்கு மேல் க்கு மேல் தேர்வுக்கு வராதோர் சம்பந்தப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் மீது உரிய சம்பந்தப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் மீது உரிய நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அரக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் கட்டுக்கள் கொண்ட துணி உறையின் மேல் கையெழுத்திட்டு, அவரவர் பணிபுரியும் பள்ளியின் முத்திரையை மட்டுமே இட வேண்டும்.

தமிழ்நாடு பொதுத் தேர்வு 2022

தேர்வு அறையில் மாணவர்களின் முன்பு தேர்வு வினாத்தாள் பிரிக்கப்பட்டு,2 மாணவர்களின் கையொப்பம் பெறப்படும். மேலும் ஒரு வகுப்பறையில் ஒரே ஒரு மாணவர் தேர்வு எழுதினாலும், அந்த அறைக்கும் 20 கேள்வித்தாள் கொண்ட கட்டுக்கள் வழங்கப்படும். இதனால் கட்டுகளை முன்கூட்டியே பிரிக்க முடியாது. தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு அனுமதிகிடையாது. கடந்த 2014ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் இருந்து கணக்கு பாட கேள்வித்தாள் வாட்ஸ்ஆப் மூலம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடும் போது செல்போன் எடுத்துக் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக் கிடையாது. தேர்வில் முறைக்கேட்டில் ஈடுப்படும் மாணவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக உள்ளது.

இதனால் முறைகேட்டில் மாணவர்கள் ஈடுபடுவதும் குறைந்துள்ளது. தனியார் பள்ளியில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் முறைகேடு நடந்தால், அந்த மையத்தின் அங்கீகாரமும், பள்ளியின் அங்கீகாரமும் ரத்துச் செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கைகள் இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி

ABOUT THE AUTHOR

...view details