புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் நலனை கருத்தில்கொண்டு கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைக்குச் செல்ல வசதியாக சம்பளத்துடன் கூடிய 10 நாள்கள் விடுமுறை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் இதனை வெளியிட்டார்.
புற்றுநோய் சிகிச்சை: அரசுப் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசுப் பணியாளர்களுக்கு 10 நாள்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி புற்றுநோய் சிகிச்சைக்குச் செல்லும் அரசுப் பணியாளர்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன், சிகிச்சைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும் என்றும் இதற்கு மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்