தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில் வந்தே பாரத்? எக்கனாமிக் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை! - Plea for economy class coach in

TN vande Bharat Train: தமிழகத்தினுள் சென்னை to கோவை, சென்னை to திருநெல்வேலி செல்லும் 'வந்தே பாரத்' ரயில்களில் எகனாமிக் வகுப்பு பெட்டிகளை இணைத்து சாமானி மக்களும் அதில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 9:27 PM IST

Updated : Oct 11, 2023, 9:29 AM IST

சென்னை:சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்களில் சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வந்தே பாரத் ரயிலால் ஒரு தரப்பு மக்களின் ஆதரவையும்மற்றொரு தரப்பு சாமானிய மக்களின் கனவாக மட்டுமே இருந்து வருகிறது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து தான். மேலும் இந்தியாவில், பல்வேறு நகரங்கள் ரயில்பாதை மூலம் இணைக்கப்படுகின்றன. தற்போது, நவீன வசிதகளுடன் அதிவிரை ரயிலாக, 34-வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இதில் தற்போது தமிழகத்தில், சென்னை - மைசூரூ, சென்னை - கோவை, விஜயவாடா - சென்னை, திருநெல்வேலி - சென்னை என நான்கு வந்தே பார்த் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்துக்குள் இயக்கப்படுகின்றன.

வழக்காமக சென்னை சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல, சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் என தினசரி சேவை இருக்கின்றன. இதில் 7.55 மணி நேரத்தில் இருந்து 8.15 மணி நேரமாக பயண நேர ஆகின்றன. சதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர) ரயிலில் 07.05 மணி நேர பயண நேரமாக இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் பயண நேரம் 6 மணி நேரமாக இருக்கின்றன. இதில், கோவைக்கு செல்லும் மற்ற ரயில்களில், படுக்கை வசதி கொண்ட சாதான பெட்டியில் ரூ.325-மும், 3-வகுப்பு ஏசி பெட்டி ரூ.835-மும், 2-வகுப்பு, ரூ.1170-மும் என்று விலை இருக்கின்றன. ஆனால், சதாப்தி ரயிலில் சிசி பெட்டியில் ரூ.1370-மும், ஈசி பெட்டியில், ரூ.2085-மும் என விலை இருக்கிறன. அதேபோல், வந்தே பாரத் ரயிலில் சி பெட்டி, ரூ.1370-மும் ஈசி பெட்டியில், ரூ.2,485 ஆகவும் இருக்கின்றன.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்ல, குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வழக்கமான நெல்லை, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு ரூ.395, 3-ஆம் வகுப்பு - ஏசி பெட்டிக்கு ரூ.1,040-ம், 2-ஆம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.1,460 எனக் கட்டணம் உள்ளது. இந்த விரைவு ரயில்களின் தூங்கும் வசதி பெட்டிகளுக்கான கட்டணத்தைவிட ‘வந்தே பாரத்’ ரயிலின் சேர் கார் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருப்பதால் சாமானிய, நடுத்தர மக்கள் பயணிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் பயணி ஒருவர் கூறுகையில், "சென்னை - சேலத்திற்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் ஏசி சேர் காருக்கு ரூ.835 கட்டணம். ஆனால், மற்ற ரயில்கள் குறிப்பாக சென்னை - கோவை இண்டர்சிட்டி அதிவிரைவு ரயிலில் சென்னை - சேலத்திற்கு ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் ரூ.530 தான். மேலும், இதேபோல், சதாப்தி எக்ஸிபிரஸில் ரூ.935 ஆக இருக்கிறது. இது வந்தே பாரத்தை விட அதிகாமக இருக்கிறது. மேலும், வந்தே பாரத் ரயிலின் நேரம் வசதிக்காக இவ்வளவு கட்டணம் வசூலித்தால் நடுத்தர குடும்பத்தை சார்ந்த பயணிகள் எப்படி பயணிப்பார்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்க வேண்டும்:இதேபோல், திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்த பயணிகளை சிலரை கேட்டபோது, "திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் கட்டணம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் பெரும்பாலனோர், இங்கு சிறு சிறு கடைகள், மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைப் பார்ப்பவர்கள்தான் ஒரு அனுபவத்திற்காக இதில் பயணிக்காலாம்; ஆனால், வந்தே பாரத் ரயிலில் தொடர்ந்து பயணிக்க முடியாது. மேலும், ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைத்தால், எல்லா தரப்பிரனரும் இதில் பயணிப்பார்கள். மேலும், இந்த வந்தே பாரத் ரயில் என்பது, ஒரு தரப்பு மக்களின் ஆதரவையும் மற்றொரு தரப்பு சாமானிய மக்களின் கனவாக மட்டுமே இருந்து வருகிறது' என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, " 'வந்தே பாரத்' ரயிலானது அதிக தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘வந்தே பாரத்’ ரயிலை மற்ற ரயில்களுடன் ஒப்பிட முடியாது. மேலும் இதில், பல்வேறு வசிதகள் உள்ளன. எகனாமிக் பெட்டி பொருத்துவது என்பது சாதன விஷயம் அல்ல. மேலும் இதற்காக ‘புஷ்புல்’ ரயில் தயாரிக்கப்படுகிறது'' என்று கூறினர்.

இதையும் படிங்க:"மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" - பாரதியின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்து வரும் ஓவியர்கள்!.. என்ன சிறப்பு தெரியுமா?

Last Updated : Oct 11, 2023, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details