சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வருபவர் ரித்து (23). இவர் நேற்றிரவு கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையிலுள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வாசலில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு இரண்டு இருசக்கரத்தில் வந்த நான்கு பேர் ரித்துவின் ஹேண்ட்பேக்கை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் ரித்து கூச்சலிடவே அருகிலிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களைத் துரத்திச்சென்றனர்.
துரத்திச் சென்றதில், இரண்டு கொள்ளையர்கள் ஈ.வே.ரா. சாலை அருகே சிக்கிக்கொண்டனர். பின்னர், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.