தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - போலீஸுக்கு அடி உதை - police constable Sexual harassment in vadapalani

சென்னை: இரவு பணிமுடிந்து பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமைக் காவலருக்கு பொதுமக்கள் அடி உதை கொடுத்தனர்.

சென்னை
சென்னை

By

Published : Dec 7, 2020, 12:24 PM IST

Updated : Dec 7, 2020, 12:35 PM IST

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று இரவு பணிமுடிந்து இவர் 10.45 மணியளவில் வடபழனி 200 அடி சாலை நெடும்பாதை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்த அப்பெண்ணிடம் 'பஸ் வர லேட் ஆகும், அதனால என்னோட பைக்கில் வா' என்று கூறியுள்ளார்.

அதற்கு அப்பெண் 'நீங்கள் யார் என்றே தெரியாது, நான் வரவில்லை நீங்கள் போகலாம்" என்று கூறியுள்ளார். போதையில் இருந்த அந்த ஆசாமியோ அங்கிருந்து நகராமல், நீ பைக்கில் கட்டாயம் என்னுடன் வரவேண்டும் என்று அப்பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

தலைமைக் காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இதனைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து போதையில் இருந்த ஆசாமிக்கு அடி உதை கொடுத்தனர். இதுதொடர்பாக தகவலின்பேரில் அங்கு வந்த வடபழனி போலீசார், குடிபோதையில் இருந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்த ராஜு (39) என்பதும், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி் வருவதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பெண்களே உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா?

Last Updated : Dec 7, 2020, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details