பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாதந்தோறும் முதல் வெள்ளி, மூன்றாம் வெள்ளி, ஐந்தாம் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
வயது வந்த இளம்பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களைச் சந்தித்துவருகின்றனர். மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, விட்டுவிட்டு வரும் மாதவிடாய் என்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை அதிகளவில் சந்தித்துவருகின்றனர்.