இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி, "கஸ்தூரி ரங்கன் குழு தயார் செய்துள்ள அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தி படிக்க வேண்டும் என்று மும்மொழி கொள்கை சொல்லப்பட்டிருந்தது. பின்பு இந்தி என்பது திருத்தப்பட்டு ஏதாவது ஒரு மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையை வரவேற்கும் கிருஷ்ணசாமி! - இந்தி
சென்னை: மும்மொழிக் கொள்கையை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி மும்மொழி கல்வியை வரவேற்கிறது. 1990 ஆண்டுக்கு பின் உலகமயமாதல், தனியார்மையப்படுத்துதல் போன்றவற்றின் காரணத்தால் நாம் வேறு மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியை திணிக்காமல் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்து படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.