தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல் - rajagopalan confession

பாலியல் தொந்தரவு விவகாரத்தில் காவல் துறையால் பிடிக்கப்பட்ட பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajagopalan confession, 0psbb rajagopalan, psbb school, பத்மசேஷாத்ரி பள்ளி
உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

By

Published : May 24, 2021, 9:29 PM IST

சென்னை:பத்மசேஷாத்ரி பால பவன்பள்ளியில் "பல கருப்பு புள்ளிகள்" உள்ளதாக விசாரணையில் ஆசிரியர் ராஜாகோபாலன் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதேபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களுடன் சேட் செய்வது, மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பச் சொல்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

வணிகவியல் (காமர்ஸ் & ஆக்கவுண்டன்ஸி) பாடத்தில் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மாசேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் ராஜகோபாலன்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உஷாரான ராஜகோபாலன் தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படம், அவர்களுடன் பேசிய அந்தரங்க செய்திகள் ஆகியவற்றை டெலிட் செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் உள்பட பல துறைகளில் உள்ள பிரபலங்கள் பலர் ராஜகோபாலனின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளியை விமர்சித்து டி.எம்.கிருஷ்ணா ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details