சென்னை:பொறியியல் படிப்பில் இறுதிச்சுற்றுக் கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டில் 43,913 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கான இடங்களை நாளை 5 மணிக்குள் உறுதி செய்யவேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. கலந்தாய்வின் முடிவில் சுமார் 43 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்பிற்கான இறுதிச் சுற்றுக் கலந்தாய்வு அக்.29 தொடங்கி நவ.13 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்விற்கான இறுதி ஒதுக்கீடு நவ.3 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தரவரிசைப் பட்டியில் 94 ஆயிரத்து 621 முதல் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 வரையில் இடம் பெற்ற 61 ஆயிரத்து 658 பேர் அழைக்கப்பட்டனர்.