தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும் - etv bharat

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும்
சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும்

By

Published : Jul 27, 2021, 2:07 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் உ.வாசுகி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பெண்களுக்கு எதிரான இணைய தள குற்றம் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களை தடுக்க கராரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும். தொலைக்காட்சி மூலமாக ஆன்லைன் வகுப்பை அரசு நடத்த வேண்டும். பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி உள்ளாட்சிகள் தோறும் பாதுகாப்பு குழு அமைத்திட வேண்டும்.

சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும்

தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்" என்றார்.

இதையும் படிங்க:16 பொறியியல் கல்லூரிகளை மூட விண்ணப்பம்

ABOUT THE AUTHOR

...view details