தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: 110 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய வட்டாட்சியர் - corona updates

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் 110 குடும்பங்களுக்கு மூன்று கிலோ அரிசி வீதம் 330 கிலோ அரிசியை ஆவடி வட்டாட்சியர் வழங்கினார்.

வீட்டிக்கிற்கே சென்று அரிசி வழங்கிய ஆவடி வட்டாட்சியர்!
வீட்டிக்கிற்கே சென்று அரிசி வழங்கிய ஆவடி வட்டாட்சியர்!

By

Published : Mar 30, 2020, 4:25 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் காய்கறி, மளிகை பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வீட்டிக்கிற்கே சென்று அரிசி வழங்கிய ஆவடி வட்டாட்சியர்

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியில் புதிய கண்ணியம்மன் நகர் பகுதியில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் குடியிருப்பு வாசிகள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதையறிந்த ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, குடிசை வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 110 குடும்பங்களுக்கு மூன்று கிலோ அரிசி வீதம் 330 கிலோ அரிசி வழங்கினார். இந்த நிகழ்வின்போது, திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், சமூக ஆர்வலர் ஷோபனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 17 பேருக்கு கரோனா உறுதி - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details