சென்னை திருவான்மியூரில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களும், ஆதரவற்ற சிறுவர்களுக்கு பரிசு பொருட்களும், இளைஞர்களுக்கு தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் சாலை விதிகளை பின்பற்றவும், தலைக்கவசம் அணிவதின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய காவல் ஆணையர்! - நடிகை சித்ரா மரணம்
சென்னை: திருவான்மியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நிவாரண பொருட்களை வழங்கினார்.
மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய காவல் ஆணையர்!
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், "சென்னையில் அனைவரும் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும். நடிகை சித்ரா மரணம் தொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சித்ராவின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னை - ரேணிகுண்டா இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!