தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல் - etv

கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு
'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

By

Published : Aug 16, 2021, 9:58 PM IST

சென்னை: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நேற்று (ஆக.15) கொண்டாடப்பட்டது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 9 மணியளவில் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றினார்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்

தொடர்ந்து முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

அதில் சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்ட விருது

கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து பேசிய திருநங்கை கிரேஸ் பானு, "முதன்முதலாக இது போன்ற விருதை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் திருநர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெறிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இவ்விருதை சாதிக்கப் போராடிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறை திருநர் மக்களுக்கும், தென்னிந்திய கூட்டமைப்புத் தலைவி திருமதி மோகனாம்பாளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இதுபோன்று தொடர்ந்து எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் திமுக அரசு, எங்களுடைய பல ஆண்டுகள் கோரிக்கையான திருநர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

தனி இடப்பங்கீடு கோரிக்கை

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், "எனது முழு வெற்றி திருநர் சமூகத்தின் தனி இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேறும் நாள் தான். என்னுடன் எல்லா சூழல்களிலும் பயணிக்கும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

போராளி கிரேஸ் பானு

தூத்துக்குடி மாவட்டத்தை, தனது பூர்வீகமாகக் கொண்டவர், கிரேஸ் பானு. தன் தாய், தந்தையினரால் புறக்கணிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பிறகு, பொறியியல் பட்டம் பெற்ற முதல் திருநங்கை.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

இவர், சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சமூகத்தின் வன்மத்தைக் கண்டு ஒதுங்கிவிடாமல் தனது வாழ்க்கையைப் போராட்ட களத்திற்கு திசை திருப்பிக்கொண்டார்.

'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு

அரசுப் போட்டித் தேர்வுகளில் திருநங்கைகளும் பங்கேற்க வேண்டும் என நீதிமன்ற ஆணை பெற்று, இந்தியாவின் முதல் காவல் ஆய்வாளராக தேர்வான திருநங்கை ப்ரித்திகா யாசினி தொடங்கி, சித்த மருத்துவத்தில் திருநங்கை தாரிகா, சத்துணவு அமைப்பாளர் சாரதா, திருநங்கைகளுக்கான வீடு பெற்று அவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான பால் பண்ணையும் பெற்றுத் தந்துள்ளார்.

இதுபோல பல பேர்களுக்கு தன்னுடைய சட்டப் போராட்டங்களின் மூலமாகப் பணிகளையும் பெற்றுத் தந்துள்ளார், கிரேஸ் பானு.

இதுமட்டுமின்றி முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் விவரம்:

தகைசால் தமிழர் விருது: சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் அப்துல் கலாம் விருது: பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்புப் பேராசிரியர் முனைவர் லட்சுமணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:கிண்டி கரோனா தொற்று மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விருது (மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை): ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி திருச்சி, சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா, திருநெல்வேலியைச் சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி, வி ஆர் யுவர் வாய்ஸ் சென்னை, ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு அமைப்பு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஒளவையார் விருது (சமூக நலத்திற்காக மற்றும் சிறந்த சேவை): ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முனைவர் சாந்தி துரைசாமி

இதையும் படிங்க:தகைசால் தமிழர் விருதை பெற்றார் சங்கரய்யா!

ABOUT THE AUTHOR

...view details