தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரேசன் கார்டு இல்லாத மக்களுக்கும் பொருள்களை  வழங்க வேண்டும்' - உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் - madras high court

சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள 500 ரூபாய்க்கான மளிகைப் பொருள்களை ரேசன் கார்டு இல்லாத அனைத்து மக்களுக்கும், நேரடியாக வீட்டிலேயே வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ration
ration

By

Published : Apr 13, 2020, 4:47 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாலும், அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும் வீட்டிற்குத் தேவையான 19 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ரேசன் கடைகளில் 500 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

500 ரூபாய் மதிப்பிலான இந்த அத்தியாவசிய பொருள்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும், நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அந்த மளிகைப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அம்மனுவில் கரோனோவை எதிர்கொள்ள ஊட்டச்சத்து அவசியமாக உள்ள சூழலில் ஊரடங்கினால் 10 லட்சத்திற்கும் அதிகமான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு போதுமாக உணவு கிடைக்காத நிலை உள்ளது என்றும், அத்தகைய மக்களுக்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லும் தன்னார்வலர்களை கைதுசெய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details