தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி டாஸ்மாக், பார்கள், கிளப்கள் ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூட வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ”அனைத்துக் கடை பணியாளர்களுக்கும் நல்ல தரத்துடன் கூடிய முகக்கவசம் (மாஸ்க்), அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) ஆகியவை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதுக் கூடங்களும் கை சுத்திகரிப்பான் வைத்து, நுகர்வோர் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த மதுக்கூட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்த வேண்டும்.