சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் உள்ள திருநீர்மலை சாலை ரமேஷ் நகர் பகுதியில், புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, ரமேஷ் நகர் திருநீர்மலை நுழைவாயில் பகுதியில் ஆர்ச் அமைப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகத்தில் கோரிக்கையும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், இந்த பகுதியில் ஆர்ச் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணை வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்ககின்றனர்.
தற்போது மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவர்கள் ஆர்ச் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை கேள்விப்பட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அப்பகுதியில் ஆர்ச் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.