தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரிக்காக போராடிய வழக்கு: திருமா, கராத்தே தியாகராஜன் நேரில் ஆஜர்! - காவிரி மேலாண்மை வாரியம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கில் தொல். திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

cauvery
cauvery

By

Published : Dec 26, 2019, 1:30 PM IST

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, முழு அடைப்புப் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளால் நடத்தப்பட்டன.

சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பான வழக்கின் விசாரணைக்காக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் நேரில் ஆஜராவதற்குச் சென்ற 24ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அவர்கள் இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற தலைவர்களின் சார்பாக அவரவர் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

இதையும் படிங்க: அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு: ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details