சென்னை: இது குறித்து இக்கட்சியின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,“பெருநகர சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லாததாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும், 06.04.2023ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ம.கோட்டீஸ்வரன் மனைவி ஜனகவள்ளி (வயது 28) இறந்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் 17.04.2023ம் தேதி நேரிடையாக மனு அளித்த போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, 59வது வட்டம், பல்லவன் சாலை, இந்திரா நகர் பகுதியை சார்ந்த நடராஜன் மகன் கனகராஜ் (வயது 37) 13:04 2023ம் தேதி சேப்பாக்கம் மசூதி தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் வழியாக மேற்கொண்டு வரும் மழைநீர் கால்வாய் பணியில் ஈடுபட்டுள்ளார். தண்ணீர் தேங்கியிருந்த கால்வாயின் ஒரு மேன்ஹோல் வழியாக சுமார் மூன்று அடி தூரம் உள்ளே சென்று மற்றொரு மேன்ஹோலில் பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை மின்சார இணைப்புக் கொண்ட கட்டிங் மிஷின் மூலம் எடுக்க தொடங்கியிருக்கிறார்.
அச்சமயம், வலது கையில் பிடித்துக் கொண்டிருந்த கட்டிங் மிஷின் கனகராஜின் இடது கையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையரிடம் 17.04.2023ம் தேதி நேரிடையாக தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆணையர் “நமக்கு இதுகுறித்து எவ்விதமான தகவலும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.