தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகிலன் உயிருடன் இருக்கிறாரா ? - தமிழ்நாடு அரசே பதில் சொல் - social activist

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன்  காணாமல்  போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து  காவிரி  ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு அரசே பதில் சொல்

By

Published : Jun 2, 2019, 8:27 AM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று காணொளி காட்சி ஒன்றை முகிலன் வெளியிட்ட அன்றிலிருந்து அவர் காணாமல் போய் நூறு நாட்களுக்கு மேல் ஆகிறது.

இதற்கிடையே, சிபிசிஐடி கைவசம் இருக்கும் இந்த வழக்கில் சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற அச்சம் எல்லோரையும் தொற்றிக் கொண்டதால் தமிழ்நாடு அரசு இப்பிரச்னையை திசை திருப்ப முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இதனைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

தமிழ்நாடு அரசே பதில் சொல்

அப்போது, பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கும் முகிலன் காணாமல்போன விவகாரத்தில் இருக்கும் முடிச்சை அவிழ்க்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக தமிழ்நாடு அரசு இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது எனத் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், தமிழ்நாடு அரசின் கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் போராடிய முகிலன் காணாமல்போய் 100 நாட்கள் ஆகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நிலைமையை தமிழ்நாடு அரசு கூறவில்லை எனவும் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக செய்தியை திசை திருப்ப அரசு முயற்சிப்பதாகவும் கூறினார்

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறுகையில், எடப்பாடி அரசு வீட்டு நாய்க்குட்டி காணாமல் போயிருந்தால் கூட காவல்துறை இந்நேரம் கண்டுபிடித்து இருக்கும் என்றும் போராடியவருக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாகவும் காவல்துறை செயல்படுவதாகவும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும் அல்லது முகிலனை முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர். நல்லகண்ணு கூறுகையில், பல போராட்டங்கள் நடத்தியும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் உண்மையை வெளிக்கொண்டுவரும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details