தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி பள்ளி முன்பு குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு! - anganvadi

சென்னை: திருவொற்றியூரில் அங்கன் வாடி பள்ளி முன்பு குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

By

Published : Aug 3, 2019, 4:51 AM IST

திருவொற்றியூர் மாட வீதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சேரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அங்கன்வாடி எதிரே வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகள் காற்றில் பறந்து சென்று அங்கவடியிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் விழுகிறது. இதனால் குப்பை சேகரிப்பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மேலும் அதே இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டி, தரம் பிரித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி பள்ளி முன்பு குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

இதையறிந்து உடனே அங்கு விரைந்த திருவொற்றியூர் காவல் துறையினர், உரிய அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதி அளித்தபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details