இந்திய அரசின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு நேற்று வந்துள்ளார். இதைப் பலரும் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திராவிடர் தமிழர் கட்சியும் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தபய வருகைக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..! - kothapaya rajapakse
சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினரும், வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் தமிழர் கட்சியினர் அவர்களது கொடியையும் கருப்பு கொடியையும் ஏந்தியவாறு வந்தனர். அவர்களில் சிலர் கையிலும் தலையிலும் கட்டு போட்டபடி வந்தனர். மேலும், 'கோ பேக் கோத்தபய என்ற பிளக்ஸ்' பேனரை வைத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இதேபோல் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈழத்தமிழர்களைக் கொன்ற இலங்கை அதிபரை, இந்திய அரசே வரவேற்காதே என்று கோஷங்களை எழுப்பினர்.