தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தை, ''தனிநபர் சத்தியா கிரகம்” என்ற பெயரில் தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் கைது
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிமுக
ராமதாசன் என்பவர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இரு பெண்கள் உள்பட மூன்று ஆண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்து ராயப்பேட்டையில் உள்ள நல்வழி திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.