முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து திமுகஎம்.பி ஆ.ராசாஅவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,சென்னை, ஓட்டேரி பாலத்தில் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் உள்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் தொடர்ந்து ஆ.ராசாவின் உருவ பொம்மையை காலணியால் அடித்து எரிக்க முயன்றனர். அப்போது அதைத் தடுக்க வந்த காவல் துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் இருதரப்பிலும் சமாதானம் செய்துவைக்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஆ.ராசாவைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஓட்டேரி பாலத்தின் நான்கு புறங்களிலும் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைக் காவல் துறையினர் சீர்செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அதிமுக மகளிரணியினர் ஆ. ராசா உருவ பொம்மையை எரித்து போராட்டம்!