சென்னை: சென்னை, வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 16 ஆயிரம் சதுர அடி பரப்பிலான திருக்குளம் பாலகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ளது. திருக்குளத்தை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக 26 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் மீது சென்னை இணை ஆணையர் (மண்டலம்-1) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 11 கோடி.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன், ஆய்வாளர்கள் சம்பத், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்