இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016இன்படி, சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்-2019இல் இயற்றப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணத்துடன் சொத்து வரி! - Commissioner Prakash
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் 01.01.2021 முதல் சொத்துவரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசாணை எண் G.O.(2 D) எண்-09 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MC1) நாள்:10.01.2020ன்படி தமிழ்நாடு அரசின் அனுமதி பெறப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 11.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்-2019ன்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை (User Charges) சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்பதால், இதனை சொத்துவரியுடன் சேர்த்து 01.01.2021 முதல் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்-2019ன் அட்டவணை–Iல் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டிய தென்னக ரயில்வே!