தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 6, 2023, 10:37 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

அவ்வாறு அங்கன்வாடி மையங்களில், உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் போது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும்போது அங்கன்வாடி மையங்கள், அரசின் கொள்கை முடிவின்படி வருடம் முழுவதும் இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதங்களில், குழந்தைகள் மையங்கள் வழக்கமாக செயல்படும் நாட்களில் முன்பருவக் கல்வி மூலம் பயன்பெறும் 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும் 12 கிராம் புரதச்சத்தினை ஆண்டில் 300 நாட்களுக்கு வழங்கும் வகையில், 50 கிராம் சத்துமாவு.

சமைத்த உணவு முட்டை. பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்குவதன் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் பயன்படுத்த தயாராக உள்ள உணவு (Ready to Use Therapeutic), ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இதர சுகாதார கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நாட்களுக்கு மேற்கண்டுள்ள கோடை விடுமுறை வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்தினை முற்றிலுமாக தவிர்ப்பதை விட, தற்போது அவர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினையே வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்து, அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-

i. முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணை இவ்வாண்டிற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

ii. நடப்பாண்டில் மே மாதம் 10ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் முடிய 15 நாட்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

iii. மைய அரசின் நெறிமுறைகளின்படி அங்கன்வாடிப் பணிகளின் கீழ் இணைஉணவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை இல்லை என்பதாலும் மேற்கண்ட கோடை விடுமுறைக் காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

iv. மே மாதம் 50 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே மையங்களுக்கு வருகை புரிவதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் அந்த அளவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் தேவை ஏற்படின் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள். இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தி சர்ப்ரைஸ் விசிட் - மாணவர்களுடன் சாப்பிட்டவாறு கலந்துரையாடல்..!

ABOUT THE AUTHOR

...view details