தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு! - சுனில் குமார்

சென்னை : தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Promotion of IPS officers TamilNadu Govt
ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!

By

Published : Feb 23, 2020, 10:00 PM IST

மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் தலைவர் சுனில்குமார் சிங், ஆவின் காவல்துறை கூடுதல் தலைவர் சுனில் குமார், சிறைத்துறை கூடுதல் தலைவர் அபாஸ் குமார், காவலர் நலன் பிரிவு மண்டல காவல் தலைவர் (ஐ.ஜி) சேஷாய் ஆகிய ஐந்து ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் உத்தரவைத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலர்கள்.

தமிழ்நாடு காவல்துறையில் மூப்பு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 1988 (3 அலுவலர்கள்), 1995 (2 அலுவலர்கள்) ஆகிய இரு ஆண்டுகளில் ஐ.பி.எஸ் அலுவலர்களாகத் தேர்வாகி பணியில் சேர்ந்தவர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியலைத் தகுதி அடைப்படையில் தயாரித்த தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில், பதவி உயர்வு வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 5 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் காவல் துறைத் தலைவராக சுனில்குமார், ஈரோடு சிறப்புப் பிரிவு காவல் துறை கூடுதல் தலைவராக சேஷசாயி, சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் தலைவராக (ஏடிஜிபி) அபாஸ் குமார், மதுரை காவல்துறை கூடுதல் தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம், தமிழ்நாடு சிறைத்துறை தலைவராக சுனில்குமார் சிங் உள்ளிட்ட ஐந்து ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அதேபோன்று, டி.ஐ.ஜி.க்கள் 8 பேருக்கு, ஐ.ஜிக்களாக பதவி உயர்வும், காவல்துறை கண்காணிப்பாளர்களாக உள்ள 7 காவல்துறை அலுவலர்களுக்கு டிஐஜியாக பதவி உயர்வு பெறுவதற்காக உத்தரவு விரைவில் வெளியாகும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : 'தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்' - ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்

ABOUT THE AUTHOR

...view details