சென்னை:தமிழ்நாட்டில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு - IAS officers Promotion
தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக உள்ள குமார் ஜெயந்த், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளராக உள்ள கே. கோபால், Tangedco தலைவர் மற்றும் மேலான் இயக்குனராக உள்ள ராஜேஷ் லக்கானி, தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளராக உள்ள மங்கத்ராம் ஷர்மா, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு