சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரச் சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழவுள்ளது.
வரும் 18ஆம் தேதி இரவு தொடங்கி 19ஆம் தேதி வரையில் இது ஏற்படவுள்ளது. இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்படவுள்ளது. அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியைப் பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும்.