தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை விரிவுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

By

Published : Sep 3, 2021, 1:50 PM IST

சென்னை:பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் குறைக்க தமிழ்நாடு அரசு குறைந்த தரத்திலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க உள்ளது.

அதன்படி பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாற பயன்படும் தட்டுகள், தெர்மோகோல், ஐஸ்கிரீம் குச்சிகள் ஆகியவற்றிக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தடைவிதிக்கப்பட உள்ளது.

மேலும் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள், 60 கிராம் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் பயன்படுத்த வரும் 30ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு முதல் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

ABOUT THE AUTHOR

...view details