தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமிக்கத் தடை! - tamilnadu goverment related appointment of professors

சென்னை: தமிழ்நாட்டில் பணிக்காலம் முடிவடைந்த பேராசிரியர்களை மீண்டும் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கக் கூடாது என உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : May 24, 2020, 5:40 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்ததும், கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உயர் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து அனைத்து பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா அனுப்பி உள்ள கடிதத்தில், "பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த, சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து இருக்கின்றன. இது தகுதியான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கும்.

எனவே, பல்கலைக் கழகங்கள் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறப்பு பயண பாஸ் முறைகேடுகளுக்கு கடுமையான நடவடிக்கை - தலைமைச் செயலாளர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details