தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகர் ஆகிறாரா அசோக்வர்தன் ஷெட்டி? - former IAS officer Ashokvardhan Shetty

தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக்வர்தன் ஷெட்டி
அசோக்வர்தன் ஷெட்டி

By

Published : Oct 27, 2021, 12:03 PM IST

சென்னை: தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரங்கள் பொருந்திய பதவி, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசகர்/ தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பதவி. இப்பதவியில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் அசோக்வர்தன் ஷெட்டி நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டாலின் உடனான நல்லிணக்கம்

முன்னதாக திமுக ஆட்சியில் இருந்த 2006-2011 காலக்கட்டத்தில் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்தபோது ஐஏஎஸ் அலுவலர் அசோக்வர்தன் ஷெட்டி உள்ளாட்சித்துறை செயலராக பதவி வகித்தார். அப்போது பல்வேறு ஆலோசனைகளை ஸ்டாலினுக்கு அவர் வழங்கியுள்ளார்.

விருப்ப ஓய்வு

அதன் பிறகான அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற அசோக்வர்தன், பிறகு கனடாவில் தனது குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கினார். எனினும் ஸ்டாலினுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வந்த அவர், முன்னதாக எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்பட்டபோதும் பல ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

நேர்மையான அலுவலர்கள் நியமனம்

முன்னதாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் திறமை வாய்ந்த, களத்தில் நேர்மையாகப் பணியாற்றிய புதிய அலுவலர்கள் நியமிக்கப்படத் தொடங்கினர். அதன்படி, தலைமைச் செயலராக இறையன்பு, முதலமைச்சரின் முதன்மை செயலராக உதயசந்திரன் ஐஏஎஸ், முதலமைச்சரின் தனிச் செயலர்களாக உமாநாத் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக கந்தசாமி ஐபிஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

அசோக்வர்தன் ஷெட்டி

இந்நிலையில் தற்போது காலியாக உள்ள மற்றொரு பதவியான தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பதவிக்கு திறமையான ஐஏஎஸ் அலுவலரான அசோக்வர்தன் ஷெட்டியை நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

முன்னாள் அரசு அலோசகர்கள்

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சரிடம் நற்பெயரைப் பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சண்முகம் ஆகியோர் இப்பதவிகளை வகித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் நற்பெயர் பெற்ற அசோக் ஷெட்டி விரைவில் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசை வழிநடத்த ஸ்டாலின் நியமித்துள்ள புதிய அலுவலர்கள்: ஓர் பார்வை

ABOUT THE AUTHOR

...view details