இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 3 மண்டலக் கல்லூரிகள், 13 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் வேலை! - Temporary Professor
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டலக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 71 தற்காலிக பேராசிரியர் பணிக்கு ஜூன்18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளுடன் வருகிற 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கல்வித் தகுதியை பொறுத்தவரையில் தொழிற்கல்வி படிப்பில் முதுகலையும், பட்டப்படிப்பில் 75 விழுக்காடுடன் முதுகலை மற்றும் எம்.பில் பட்டமும் பெற்றிருக்கவேண்டும்.
அதிகளவில் விண்ணப்பம் பெறப்பட்டால் தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயார் செய்து நேர்காணல் மூலம் தகுதியான தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ரூ. 20ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.