தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

பெட்ரோலியப் பொருட்களால் உருவாக்கப்படும் எரிபொருள் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிப்பதால், உயிரிக்கழிவு எரிபொருள் நடைமுறைத் தீர்வாக உள்ளது. உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உருவாக்குவது இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில், இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 750 மில்லியன் மெட்ரிக் டன் உயிரிக் கழிவுகள் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது நாடு தற்சார்பு அடைவதற்கு உதவும்.

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி
சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

By

Published : Feb 9, 2022, 9:31 PM IST

சென்னை: உயிரிக் கழிவுகளை வாயு சார்ந்த எரிபொருளாக மாற்றும் நடைமுறைகள் தொடர்பான ஆய்வுக்குச் செயற்கை நுண்ணறிவு கருவிகளைச் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய ஆய்வை மனிதர்கள் கைகளால் நடத்துவது கூடுதல் நேரமும், செலவும் பிடிப்பதாகும்.

கணினி சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது விரைவான பயனைத் தரும். உயிரிக்கழிவுகளைப் பதப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் உற்பத்தி நிலையங்களைக் கட்டமைப்பதற்கும் பயன்படுத்த முடியும்.

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

பெட்ரோலியப் பொருட்களால் உருவாக்கப்படும் எரிபொருள் சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகரிப்பதால், உயிரிக்கழிவு எரிபொருள் நடைமுறைத் தீர்வாக உள்ளது. உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உருவாக்குவது இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது.

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

ஏனெனில் இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 750மில்லியன் மெட்ரிக் டன் உயிரிக் கழிவுகள் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது நாடு தற்சார்பு அடைவதற்கு உதவும்.

உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்திக்கான ஆய்வுக்குச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தும் ஆய்வுக் குழுவிற்கு, சென்னை ஐஐடி வேதிப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஹிமான்ஷூ கோயலும், இந்தத் துறையின் பேராசிரியர் டாக்டர் நிகேத் எஸ்.கைசரேயும் தலைமை தாங்கினர்.

இதில் சென்னை ஐஐடியின் இளம் ஆய்வாளரும், கணினி அறிவியல் இளநிலைப் பட்டதாரியுமான கிருஷ்ண கோபால் சர்மா இடம் பெற்றிருந்தார்.

சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி
இந்தக் குழுவினர் உயிரிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் ஆய்வுக்கு மட்டுமின்றி சமூக ரீதியாக தேவைப்படுகின்ற சுற்றுச்சூழலுக்கும் பயன்தருகின்ற கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ரசாயன தொழில் துறையின் மின் மயம் ஆகியவற்றுக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நேரடித் தேர்வுகள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details