தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நடிகர் விமலிடமிருந்து பணத்தை வாங்கி தாங்க' -  கண்ணீர் விட்ட தயாரிப்பாளரின்  மகள்; குவியும் புகார்கள் - பணம் மோசடி செய்த நடிகர் விமல்

நடிகர் விமல் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளரின் மகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிபாளர் மகள்
செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிபாளர் மகள்

By

Published : Apr 25, 2022, 8:03 PM IST

சென்னை சாலிகிராமத்தைச்சேர்ந்த ஹேமா கணேசன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக புகார் ஒன்றை இன்று (ஏப்.25) அளித்துள்ளார். ஹேமா கணேசன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனின் மகள் ஆவார்.

புகார் கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஹேமா கணேசன், ' ‘மன்னர் வகையறா’ படத்தின் முதல் தயாரிப்பாளராக தனது தந்தை திருப்பூர் கணேசனுடன் நடிகர் விமல் ஒப்பந்தம் செய்தார். ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதற்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் வரை தனது தந்தை முதலீடு செய்தார்.

ஆனால், சில காரணங்களால் தனது தந்தை திருப்பூர் கணேசனை படத்தின் தயாரிப்புப் பணிகளில் இருந்து விமல் ஓரங்கட்டினார். ஆனால், மன்னர் வகையறா படம் வெளியானபோது, தனது தந்தைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல், நடிகர் விமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால், தனது தந்தைக்கு மன்னர் வகையறா படத்தின் தெலுங்கு உரிமையை கொடுப்பதாக உறுதி அளித்துவிட்டு, அந்த உரிமையையும் தனது தந்தைக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மன்னர் வகையறா படத்தை முதன் முதலாக தொடங்கி தயாரித்த தனது தந்தை திருப்பூர் கணேசன், கரோனாவால் இறந்ததால், அவர் பல இடத்தில் வாங்கிய கடன் தொகைக்கு, அவருடைய வாரிசு என்ற அடிப்படையில், கடன் கொடுத்தவர்களுக்கு நான் பதில் சொல்லி வருகிறேன்’ என கண் கலங்கியபடி கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளரின் மகள்

மேலும் ஏற்கெனவே விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் கங்காதரன் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் விமல் பணமோசடி செய்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் மற்றும் தயாரிப்பாளர் கோபி ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பதில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Video:'அசின் போட்ட ஸ்டெப்... மோடி குறித்த பேச்சு...' - பேரரசுவை Thug Life செய்த மன்சூர் அலிகான்!

ABOUT THE AUTHOR

...view details