தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிக்காத படத்திற்கு போஸ்டர்.. பொங்கி எழுந்த யோகி பாபு.. ஆடியோவில் கூறியது என்ன..?

நடிகர் யோகி பாபு கடந்த சில நாட்களாக ட்விட்டர் பக்கத்தில் தான் ஹீரோவாக நடிக்காத படத்திற்கு தனது புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியது குறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

யோகி பாபு
யோகி பாபு

By

Published : Dec 4, 2022, 7:07 AM IST

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபு ’தாதா’ எனும் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ,”இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யாதான் ஹீரோ வாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன்” என ட்வீட் செய்திருந்தார்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் ’தாதா’ படத்தின் போஸ்டரை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “இதில் நான் ஹீரோ நண்பனா தான் பண்ணிருக்கன், நிதின் சத்யா தான் ஹீரோ. மக்களே யாரும் நம்பாதீங்க” என தெரிவித்திருந்தார். நடிகர் யோகி பாபுவின் இந்த இரண்டு ட்வீட்களும் படு வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.

ஆடியோ விளக்கம்: ஆனால் யாருக்கும் அதன் பின்னால் என்ன நடந்துள்ளது என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. இந்த சூழலில், ஆர்.ஆர் சினி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் துரைராஜன் என்பவர், ’தாதா’ என வலம் வரும் இந்த படத்தை, தான் கடந்த 2015 ஆம் ஆண்டு 5 கோடி செலவில் 'மணி' என்ற பெயரில் எடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் தனது ’மணி’ எனும் இப்படத்தை தற்போது ’தாதா’ என்று பெயர் மாற்றி தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய கிஷோர் என்பவர், வெளியிட உள்ளதாக குற்றஞ்சாட்டி தயாரிப்பாளரான துரைராஜன், இணை தயாரிப்பாளர் விஜய் போஸுடன் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் யோகி பாபுவும்” ’தாதா’ எனும் படத்தில் நான் நடிக்கவில்லை, ’மணி’ எனும் படத்தில் தான் நான் நடித்தேன்” என அவரே ஒப்புக்கொண்ட ஆடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

யோகி பாபு பேசிய ஆடியோ

படத்தின் ஹார்டிஸ்க் திருட்டு: செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் போஸ்,“தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதவியாளர் கிஷோர் குமார் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 35 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக அவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரால் ஆத்திரமடைந்த கிஷோர் குமார், எங்கள் அலுவலகத்தில் புகுந்து ’மணி’ திரைப்படத்தின் ஹார்டிஸ்கை திருடிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக துரைராஜன் அளித்த புகாரில் கிஷோர் குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் திருடப்பட்ட ஹார்டிஸ்கை கிஷோர் குமாரிடமிருந்து பறிமுதல் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில், திருடிய ஹார்டிஸ்கை வைத்து கிஷோர் குமார் 'மணி' என்ற திரைப்படத்தின் பெயரை 'தாதா' என மாற்றி, any time money புரொடக்ஷன்ஸ் பெயரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

தயாரிப்பளர்கள் அளித்த பேட்டி

கண்ணீர் மல்க பேட்டி: இதற்காக தற்போது உச்சத்தில் உள்ள காமெடி நடிகர் யோகி பாபுவின் புகைப்படத்தை வைத்து புரமோஷன் பணிகளிலும் கிஷோர் குமார் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த படம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கிஷோர் குமார் சட்டவிரோதமாக ’மணி’ என்ற படத்தை தாதா என பெயர் மாற்றி இசை வெளியீட்டு விழா நடத்துகிறார். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, ஹார்டிஸ்கை பெற்று தர வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் துரைராஜன் பேசுகையில்,“ ’மணி’ என்ற திரைப்படத்தை கடன் வாங்கி எடுத்துள்ளேன், இந்த படத்தை கிஷோர் குமார் ரிலீஸ் செய்தால் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரவுடி கிஷோர் குமார் மீது பல முறை புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வேதனையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

படத்தை திருடியதாக கூறப்படும் கிஷோரின் ட்வீட்

’தாதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், யோகி பாபுவின் புகைப்படத்துடன் உள்ள போஸ்டரை வைத்தே சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் ’தாதா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

’தாதா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

இதையும் படிங்க:வெற்றி மாறனின் "விடுதலை" படப்பிடிப்பில் விபத்து.. சண்டை பயிற்சியாளர் சுரேஷ் பலி!

ABOUT THE AUTHOR

...view details