தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் பிறந்தநாள் - தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து! - etv bharat

நடிகர் விஜயகாந்தின் 69-வது பிறந்தநாளை ஒட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் பிறந்தநாள்
விஜயகாந்த் பிறந்தநாள்

By

Published : Aug 25, 2021, 3:35 PM IST

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று (ஆக.25) தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜயகாந்த் பிறந்தநாள்

இதுகுறித்து அதன் தலைவர் முரளி ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படத் தயாரிப்பாளர்களை எங்கு பார்த்தாலும் மனதார 'முதலாளி' என்று அன்போடு அழைத்து பழகும் குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் எனது தந்தை ராமநாராயணன் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

அன்போடும் பண்போடும் பரிவோடும் பழகி வரும் விஜயகாந்த்-க்கு
இன்று பிறந்தநாள். அவர் நலமுடனும் வளமுடனும் வாழ்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:HBD விஜயகாந்த் - யாரையும் மூழ்கடிக்காத கேப்டன்

ABOUT THE AUTHOR

...view details