தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!! - chennai

சர்கார் படத்தில் நடித்த துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரோல்ஸ்டன் கருப்பசாமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சர்கார் பட நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!
சர்கார் பட நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!

By

Published : Jun 18, 2022, 12:06 PM IST

Updated : Jun 18, 2022, 2:06 PM IST

சென்னையை பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோல்ஸ்டன் கருப்பசாமி தனது நண்பர் தியாகு என்பவருடன் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோல்ஸ்டன் கருப்பசாமி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்த குறும்படம் பெருமளவில் வெற்றியடைந்த காரணத்தினால், ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்ததாகவும், அப்போது நண்பர் ஜெயகிருஷ்ணன் மூலமாக சர்கார் உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிய ஆறுபாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

50 லட்ச ரூபாய் செலவில் போர்க்கொடி என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக ஆறுபாலா கூறியதால், இவரை நம்பி படத்தை தயாரிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். கரோனா காலத்தில் சென்னைக்கு வரமுடியாத காரணத்தினால் old patriotic production பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் பெயரில் வங்கி கணக்கை தொடங்குமாறு ஆறுபாலாவிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் படத்திற்காக தவணை முறையில் 82 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல மாதங்களாக படத்தை முடிக்காமல் கொடுத்த பணத்தை மோசடி செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகமடைந்து சென்னைக்கு வந்து விசாரித்த போது ராஜபாண்டி, தமிழ்செல்வி, ஆறுபாலா ஆகியோர் இணைந்து படத்தை முடிக்காமல், தங்களது பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரியவந்ததாக கூறியுள்ளார்.

சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார்!!

இந்த மோசடி தொடர்பாக படத்தின் கதாநாயகன் கார்த்திக் கேட்டப்போது, முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் படம் எடுக்கப்போவதாக 82லட்சம் மோசடி செய்த நடிகர் ஆறுபாலா,ராஜபாண்டி, தமிழ்செல்வி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதயநிதி நற்பணி மன்ற நகரச்செயலாளர் கைது

Last Updated : Jun 18, 2022, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details