சென்னை:சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியதன் காரணம் குறித்து மனம் திறக்கிறார், தயாரிப்பாளர் மணிகண்டன். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO of Google) சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.
சுந்தர் பிச்சையின் தந்தை மதுரையை சேர்ந்தவர் என்றாலும் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். அசோக் நகரில்தான் அவர் முதல் முதலாக வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் சுந்தர் பிச்சை பிறந்தார். சென்னையில் உள்ள பள்ளியில் படித்த அவர், 20 வயது வரை அசோக் நகர் வீட்டில் தான் வசித்துள்ளார். அதன் பின்னர் படிப்பு முடிந்து தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விற்க, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தந்தை முன்வந்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டன், சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சி.மணிகண்டன் நமது ஈடிவி பாரத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனது அலுவலகம் அசோக் நகரில் தான் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் அங்குதான் உள்ளேன். அங்கு வீடு வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அப்போது எனது நண்பர் மூலமாக அங்கு வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதை அறிந்தேன். அவர், அது பெரிய ஆளின் வீடு என்று சொன்னார்.