தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது துரதிஷ்டமானது. மற்ற மாநிலங்களில் இதுபோல் கிடையாது.
அதற்குக் காரணம் தலைமை பொறுப்புகளில் இருந்தவர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பங்களே என நம்புகிறேன். பழைய சங்கங்கள் கால மாற்றத்தை உணர்ந்து, கொள்கைகளை கட்டமைத்துக்கொள்ள வேண்டும், அல்லது மற்ற சங்கங்களுடன் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்.
இதை விடுத்து மற்ற சங்கங்களையும், அதில் உள்ளவர்களையும் அடக்கி ஆள நினைப்பது, திரைத்துறையையே நிர்மூலமாக்கிவிடும். இதற்கு சான்றாக டிஎப்பிசி (TFPC) புதிய நிர்வாகம் பல சீர்கேடான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது.முந்தைய டிஎப்பிசி நிர்வாகம் இரு வேறு சங்கங்களுடன் இணக்கமாக இருந்து, தயாரிப்பாளர்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது, இதனை புதிய நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும்.