தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இலவச கல்வி பெற சிக்கல்! என்ன காரணம்?

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து பரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 21, 2023, 8:16 AM IST

சென்னை: தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஆறுமுகம், தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு RTE திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை குறித்து மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், "மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) சுயநிதி பள்ளிகளில் ஆரம்ப வகுப்பில் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கை செய்ய, மாணவர்களை தேர்வு செய்து பள்ளிக்கு அனுப்புகிறது.

அனைத்து பள்ளிகளும் அந்த மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தி வருகிறோம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அதே கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக அரசு நிதி வழங்க வேண்டும். ஆனால் 2021 - 22 கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தையே அரசு இன்னும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மேலும் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டும் முடியும் நிலையில் உள்ளது.

ஆனால் இந்த ஆண்டிற்கு ஆய்வு செய்ய ( Team Visit) கூட இன்னும் யாரும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. 2 ஆண்டு கல்விக் கட்டணத்தை இதுவரை வழங்காத பள்ளிக்கல்வித் துறையின் இவ்வாறான அலட்சியப் போக்கால் பள்ளி நிர்வாகிகள் பள்ளி நடத்துவதற்கே தடுமாறுகின்றனர்.

பலர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் கால்வாசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்காததால், பள்ளி நிர்வாகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதே சமயம், பள்ளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

அதாவது மின் கட்டணம், சொத்து வரி, பள்ளி புதுப்பித்தல் கட்டணம், வைப்புத்தொகை, ஆய்வுக்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் பள்ளி மாணவர்களிடம் வாங்க வேண்டிய கல்விக் கட்டணங்களை அதே அடிப்படையில் உயர்த்த வேண்டும். அதுவும் இல்லை.

மேலும் அரசு ஒதுக்கீடு செய்யும் மிக குறைந்த கல்வி கட்டணத்தையும் 2 ஆண்டுகள் கழித்தே வழங்குகிறது. பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய RTE கட்டணத்தை வழங்கும் வரை அந்தந்த ஆண்டிற்கான மின் கட்டணம், சொத்துவரி, ESI போன்ற கட்டணங்களை செலுத்த கால அவகாசம் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

RTE திட்டத்தில் 25% மாணவர்களை சேர்க்க அரசு எங்களை வற்புறுத்தாமல் இருந்தால், நாங்கள் அனைத்து மாணவர்களிடமும கட்டணம் பெற்று சிறப்பாக பள்ளிகளை நடத்துவோம். ஆகவே, இதுவரை வழங்காமல் உள்ள 2021 - 22 க்கான கல்விக் கட்டணத்தை பிப்ரவரி மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் மற்றும் இந்த 2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டடத்தை வரும் மே மாத இறுதிக்குள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.

இல்லையெனில் அடுத்த 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான 25% இலவச சேர்க்கையை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது பரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்" என அதில் கூறியுள்ளார்.

RTE திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்: தனியார் பள்ளி

ஓவ்வொரு ஆண்டும் நிதி நில அறிக்கை போது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் சேரும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதியை எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பெற்று தருவதற்கும் பள்ளி கல்வித்துறை மெத்தனம் போக்குடன் செயல்பட்டு வருவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது என தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

RTE திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்: தனியார் பள்ளி

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை துரத்தும் அவலம் - மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ABOUT THE AUTHOR

...view details