தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு, பள்ளிக் கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் 3 ஆண்டுகளுக்குச் சேர்த்து, ஒருமுறை கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், கல்விக் கட்டணம் காலவரையறை முடிந்த 6 ஆயிரம் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஜூலை 20ஆம் தேதி முதல் கட்டண நிர்ணயக் குழு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விதிமுறைகளில் கல்விக் கட்டணம் கேட்டு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும், 30 ஆண்டுக்கான குத்தகை ஒப்பந்தம் சமர்ப்பிக்க வேண்டும், வரவு-செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 6 ஆயிரம் பள்ளிகளில் 2 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனால் இந்தப் பள்ளிகள் புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கக்கோரி விண்ணப்பிக்க முடியாது. இதனால் இந்தப் பள்ளிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி செலவு தொகை வழங்க உத்தரவு'