தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியில் மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு: மாணவிகளை மீட்க தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கோரிக்கை

தனியார் பள்ளி விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மதத்தைப் பின்பற்ற வற்புறுத்துவதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்கவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் பள்ளியில் மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு: மாணவிகளை மீட்க - பிரியங் கானூங்கோ கடிதம்
தனியார் பள்ளியில் மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு: மாணவிகளை மீட்க - பிரியங் கானூங்கோ கடிதம்

By

Published : Sep 9, 2022, 10:28 PM IST

சென்னைராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் கடந்த 6ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் உள்ள மாணவிகளிடம் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் குறைகளைக்கேட்டு அறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆய்வறிக்கையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பி இருந்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ, தமிழ்நாடு தலைமைச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், ’பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அழைத்து மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு அனுமதி மறுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே 24 மணி நேரத்திற்குள் அங்குள்ள பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.

இளம் சிறார் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என பதில் கூறியுள்ளனர்.

மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கடிதத்தை உள்துறைக்கும் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு முடித்து சென்ற பிறகு மாணவிகள் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்;
மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மதத்தை பின்பற்ற நிர்வாகம் வலியுறுத்துவதாகவும்; எனவே பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்பு தஞ்சை அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னணியில் மதமாற்ற சர்ச்சைகள் எழுந்தன.
இருப்பினும் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை எனத் தெரிய வந்தது. இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் சென்னையில் சேர்ந்த பள்ளி மாணவிகளை மதத்தைப் பின்பற்ற வலியுறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் தர்மபுரியில் வளர்ப்பு - கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details